Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை சமந்தா திருமண தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்?
நடிகை சமந்தா தமிழில் நான் ஈ, கத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சாவித்ரி படத்திலும், நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் படத்திலும் சமந்தா நடிக்க உள்ளார்.
இந்த படங்களின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்து விட்டு அக்டோபர் மாதத்தில் இந்து-கிறிஸ்துவ முறைப்படி சமந்தா திருமணம் நடக்க உள்ளது.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பதால் சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கடினம் என கூறப்படுகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
