virat anushka

இந்தியாவின் ஹாட் ஜோடி என்றால் அது இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான். கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள், புரளிகள் எழுந்து வந்தன.

virat

தற்போது இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோலி இத்தாலிக்கு அனுஷ்கா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில் கோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

anushka virat

நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள்  மற்றும்  கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் இவர்கள் இந்தியாவில்  ரெசெப்ஷன் வைக்கிறார்கள்.

வரும்  டிசம்பர் 21-ந் தேதி இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்களுக்கு தில்லியிலும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களுக்கு டிசம்பர் 26-ந் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அந்த பத்திரிகையுடன் இவர்கள் ஒரு செடியையும் தந்துள்ளனர். இதற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழ் தான் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் .