வெப் சைட் நடிகையான தேஜஸ்வி

நட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடலா. ராம் கோபால் வர்மாவின், ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் தெலுங்கில் பல படங்களில் கேரக்டர் வேடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த ஆண்டுவரை கைநிறைய படங்கள் வைத்திருந்தவருக்கு இந்த ஆண்டில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. சோகத்திலிருந்த தேஜஸ்வி, தனது கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார். அது கைகொடுத்திருக்கிறது. வெப் சைட்களில் ஒளிபரப்பாகும் பிரத்யேக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

ஷஷான்க் யெலெட்டி இயக்குகிறார். இதுபற்றி தேஜஸ்வி கூறும்போது,’அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது வெப் சைட் சினிமாக்கள். இதில் நடிக்கும் முதல் நடிகை நான். என் மூலமாக இந்த டிரெண்ட் தொடங்குகிறது. மெல்ல மெல்ல இது சூடுபிடிக்கும். இனிமேல் கேரக்டர் வேடங்களில் படங்கள் நடிக்க மாட்டேன். ஒன்லி ஹீரோயின் வேடம்தான்’ என்றார்.

Comments

comments