Connect with us
Cinemapettai

Cinemapettai

allrounders-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

இப்படி ஒரு ஸ்டார் எங்கள் அணிக்கும் வேண்டும்.. இந்திய அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அடிலெய்டில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதேபோல் டி20 போட்டியில் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு இந்தியா திரும்பியுள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார், இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 210 ரன்களும், டி20 போட்டிகளில் 78 ரன்களும் அடித்துள்ளார். ஹர்திக் பாண்டியா. அவர் டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கிடையில், புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியுள்ளார்.

மேலும் வார்னே அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தும் தனித்திறன் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது. அவரைப்போன்ற சூப்பர் ஸ்டார்கள் இந்திய அணியில் அனைத்து விதமான தொடர்களிலும் ஆட வேண்டும் என தனது விருப்பத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Warne-Pandya-cinemapettai.jpg

Warne-Pandya-cinemapettai.jpg

Continue Reading
To Top