ஆண்டிகுவா: ‘இந்திய அணியை வெல்லும் தகுதி தங்கள் அணிக்கும் உள்ளது,’ என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி மெகா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இந்திய அணி, இத்தொடரில் 2-0 என முன்னிலை வகித்தது.

அதிகம் படித்தவை:  சிம்பு படத்தில் இரண்டவது ஹீரோவாக நடிக்கிறாரா மகத் ? வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

இந்நிலையில் ஒரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. இதில் 190 ரன்கள் எனற் இலக்கை துரத்த முடியாமல், இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறுகையில்,’ எங்கள் அணியின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை அதிகம். இந்த அணிக்கு இந்திய அணியை வீழ்த்தும் தகுதி உள்ளது என எனக்கு தெரியும். அதனால், டாப்-ஆர்டர் வீரர்களை விரைவாக வெளியேற்றினால், வெற்றி பெற முடியும் என திட்டமிட்டோம். அதே போல, டாப் ஆர்டர் வீரர்களை அவுட்டாக்கியவுடன், இந்திய அணி ஆட்டம் கண்டது.’ என்றார்.