நாளுக்கு நாள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதில் வாட்ஸ்அப் நிறுவனம் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமூக வலைதளங்களில் மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் செயலியாகவும் இது பயன்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டேட்டஸ் வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் 30 நொடிகள் கொடுத்துள்ளது.
இடையில் தனது சர்வர் பிரச்சனை காரணமாக 30 நொடிகளிலிருந்து 15 நொடியாக குறைத்தது வாட்ஸ்அப் நிறுவனம். ஆனால் இதில் பலருக்கும் உடன்பாடு இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த 15 நொடி ஸ்டேட்டஸ் ஐடியா பயனாளர்களை கவரவில்லை.
இதனால் உடனடியாக தனது சர்வர்களை அப்லோட் செய்து விட்டு மீண்டும் 30 நொடிகள் ஆக ஸ்டேட்டஸ் நேரத்தை மாற்றி உள்ளது. இந்த செய்தி தற்போது மீம்ஸ் கிரியேட்டர் பசங்க இடையே மாட்டிக் கொண்டு வாட்ஸ்அப் நிறுவனம் படாத பாடுபட்டு வருகிறது.

மீண்டும் இந்த வசதியைப் பெற தங்களது வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.