நம் கோலிவுட்டில் மோஸ்ட் பிஸி ஹீரோக்கள் யார் என்றால் அது விஜய் சேதுபதி மற்றும் ஜி வி பிரகாஷ் தான். எப்படி கால் ஷீட் ஒதுக்குகிறார்கள், இப்படி இத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்பது புரியாத புதிரே.

வாட்ச் மேன்


இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி வி இணையும் படம். ஏற்கனவே தலைவா படத்தில் டான்ஸ் மட்டும் ஆடியுள்ளார் நம் ஹீரோ. இப்படத்திற்கு நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். எடிட்டிங் விஜயன்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போ தொடங்கியது போன்ற தகவல்கள் தெரியவில்லை. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஏமி ஜாக்சன் பட போஸ்டர் மற்றும் டீசரை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.