Sports | விளையாட்டு
ஜாம்பவான் செய்யும் காரியமா இது.? பயிற்சியாளர் மீது வெடிக்கும் பெரும் சர்ச்சை.. வைரல் புகைப்படம்
பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர். இவர் பகிர்ந்த போட்டோ தான் இணையத்தில் வைரலாகி சர்ச்சையானது.
2020 ஐபிஎல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. டேபிள் டாப்பில் இருந்த அணிகள் எல்லாம்,வரிசையாக தோல்வி அடைந்த நிலையில் கீழே இருக்கும் அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.
தற்போது இருக்கும் நிலையில் மும்பை அணி பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, பெங்களூர், பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தை பிடிக்க 6 அணிகள் சண்டை போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர், வசீம் ஜாஃபர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது..
அதாவது ஒரு சின்ன பொண்ணு போட்டோவை பகிர்ந்து அதற்கு ஆறு நாங்கள் போட்டியிடுவது போல் பாலியல்ரீதியான போட்டோவை பகிர்ந்துள்ளார் வாசிம் ஜஃபார்.
இவர் இந்த மீமை வெளியிட்டு சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் ஒரு பொறுப்பான வீரர், பல நூறு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடிய வீரர் பாலியல் ரீதியாக பொது வெளியில் இப்படி கிண்டல் செய்யலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

wasim-jaffer
