உலகமே நடராஜனை உற்று நோக்க, சத்தமில்லாமல் கலக்கிட்டாருங்க வாஷிங்டன் சுந்தர்

ஆஸ்திரேலிய தொடரில் எதனை மறந்தாலும், பல வருடங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விடுவார். நெட் பௌளராக டீம்மில் சேர்க்கப்பட்ட இவர் மூன்று பார்மட்களிலும் அறிமுகம் ஆகிவிட்டார். இந்த டெஸ்டில் இவருடன் வாஷிங்டன் சுந்தரும் அறிமுகமானார்.

சுந்தர் டி 20 டீமில் சேர்க்கப்பட்டார், பின்னர் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் பந்துவீச்சை எதிர்கொள்ள ப்ராக்டிஸ் வேணும் என்பதனால் நெட் பௌளராக டீமுடன் பயணித்து வந்தார். 21 வயதாகும் சுந்தர் ஸ்பின் பௌலிங் ஆல் ரௌண்டர் என்பது நாம் அறிந்த செய்தியே.

பல முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட நடரஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது எதிர்பார்த்தது தான், எனினும் ஜடேஜா மற்றும் அஷ்வினுக்கு காயம் ஏற்பட டீமுடன் பயணித்த குல்தீப் யதாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நேரத்தில், டீம் நிர்வாகம் சுந்தருக்கு வாய்ப்பை வழங்கியது. அவரும் சாதித்துவிட்டார்.

ஆஸி முதல் இன்னிங்ஸில் 31 ஓவர் வீசி 89 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அதில் 6 மெய்டன் அடக்கம். வெளிநாட்டு ஆடுகளத்தில் முதல் இரண்டு நாட்களில் மூன்று விக்கெட் என்பது சாதனையே. அதில் ஸ்மித் மற்றும் க்ரீன் விக்கெட்டும் அடங்கும். முதல் இன்னிங்ஸில் ஷர்தூல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.

இன்று பேட்டிங்கில் இந்தியா தடுமாறும் நேரத்தில் பேட்டிங்கில் கை கொடுத்து அசத்திவிட்டார் சுந்தர். தாகூர் மற்றும் இவர் போட்ட பார்ட்னெர்ஷிப், திருப்பு முனையாக அமைந்தது. ஒரு கட்டத்தில்189 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிய நிலையில் இந்த ஜோடி 36 ஓவர்கள் இணைந்து ஆடி 123 ரன்களை குவித்தனர். இருவரும் தங்களது அரைசதத்தின்மூலம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்திரேலிய அணியைவிட 33 ரன்களே பின்தங்கியது இந்தியா. தாகூர் 115 பாலில் 67 ரன்னும், சுந்தர் 144 பாலில் 62 ரன் எடுத்தனர்.

washington sundar – shradul thakur

முதல் போட்டி என்ற பதட்டமில்லாமல், நின்று நிதானமாக ஆடினார் சுந்தர். பல பௌன்சர்கள், உடம்பை தாக்கும் பந்துகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார், இன்று லக்கும் கை கொடுக்க சிறப்பாக செயல்பட்டார்.

வாஷிங்க்டன் சுந்தரும் அஸ்வின் போல தான், சிறுவயதில் பேட்ஸ்மேனாக ஆட ஆரம்பித்தவர், பின்னர் ஸ்பின் பௌளராக மாறியவர். இந்தியா யூ 19 போட்டியிலும் ஆடியுள்ளார். எனினும் TNPL மற்றும் IPL கொடுத்த நம்பிக்கையால் நிர்வாகம் இவரது பேட்டிங்கை நம்பி, குல்தீப்புக்கு பதில் வாய்ப்பை வழங்கியது. மனிதரும் சாதித்துவிட்டார்.

வாழ்த்துக்கள் வாஷி, செகண்ட் இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்தி கலக்குங்க என்பதே சினிமாபேட்டையின் ஆசை.