Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

வைரலாகுது ரஜினியின் ஹிட் பாடலை பாடி நடராஜனை வாழ்த்தும் வாஷிங்டன் சுந்தரின் வீடியோ

ஐபிஎல் கொண்டாட்டம் இந்த வருடம் லேட் ஆக ஆரம்பித்தாலும் UAE யில் கோலாகலமாக முடிந்துவிட்டது. இம்முறை சி எஸ் கே, ராஜஸ்தான் போன்ற டீம்கள் ரசிகர்களை ஏமாற்றி விட்டனர். ஆனால் ஆர் சி பி, டெல்லி காப்பிடல்ஸ் போன்ற டீம்கள் கலக்கிவிட்டனர். வழக்கம் போல மும்பை இந்தியன்ஸ் கோப்பையை தட்டி சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் இம்முறை பெரிதாக சொதப்பியது. பல ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் சொதப்பி விட்டனர் என்பதே பலரது கருத்து.சென்னை டீம்மில் தமிழகத்தின் சீனியர் வீரர் முரளி விஜய் கொடுத்த வாய்ப்பை சொதப்பினார். ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கியும் பேட்டிங் ஆட வாய்ப்பில்லை. சாய் கிஷோர் கடைசி வரை ஆடவே இல்லை.

ஆனால் வெவ்வேறு டீம்களில் மூன்று தமிழக வீரர்கள் முத்து முத்தாக விளையாடினர். ஆர் சி பி டீம்மில் வாஷிங்டன் சுந்தர் பவர் பிலே பந்து வீச்சில் அசத்தினார். கொல்கத்தா டீம்மில் வருண் சக்கரவர்த்தி ஸ்பின் வாயிலாக எதிர் அணியை திணறடித்தார். சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடராஜன், துல்லியமான யார்கர் பால் போட்டு அசத்தினார்.

cv varun t natarajan

ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லும் இந்திய டி 20 டீம்மில் சுந்தர் மற்றும் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்தது. பேக் அப் பௌலர் ரோலில் நடராஜன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் காயமடைந்த சக்கரவர்த்திக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் படையப்பா பட “வெற்றி கொடி கட்டு” பாடலை நடராஜனை அருகில் வைத்துக்கொண்டு சுந்தர் பாடி, விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
To Top