Sports | விளையாட்டு
தரமான ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ரவி சாஸ்திரி.. இனி வாஷிங்க்டன் சுந்தர் வேற லெவல்
21 வயதாகும் சுந்தர் ஸ்பின் பௌலிங் ஆல் ரௌண்டர் என்பது நாம் அறிந்த செய்தியே. தமிழக டீம்மில் இது இவரது ரோலாக இருப்பினும், ஐபிஎல் இவரை பௌளராக அடையாளம் கண்டது. சுந்தர் டி 20 ஸ்பெஷலிஸ்ட்டாக இந்திய டீமிலும் இணைந்தார்.
சென்ற ஆஸ்திரேலிய தொடரில் நாதன் லயன் பந்துவீச்சை எதிர்கொள்ள ப்ராக்டிஸ் வேணும் என்பதனால் நெட் பௌளராக டீமுடன் பயணித்து வந்தார். பல முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட டெஸ்ட் அறிமுகம் நிகழ்ந்தது . அங்கு ஆல் ரௌண்டராக கலக்கினார்.
பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக சென்னை மற்றும் அகமதாபாத்தில் தன் பேட்டிங் வாயிலாக டீம்மை சரிவில் இருந்து மீட்டார். பலரும் சுந்தரை பாராட்டி வருகின்றனர். பிசிசிஐ இவரது திறனை சரியாக பயன் படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , சுந்தர் பற்றி பின்வருமாறு பேசியுள்ளார்,
“நம்பமுடியாத அளவு இயல்பான மனநிலை மற்றும் அமைதியாக உள்ளார் வாஷிங்டன் சுந்தர். என்ன தான் யூ 19 அளவில் ஒபெநிங் பேட்ஸ்மானாக இருப்பினும், சர்வதேச அளவில் பதட்டமின்றி, தன்னம்பிக்கையுடன் உலகின் சிறந்த பௌலர்களை அதுவும் பிரிஸ்பேன், சென்னை போன்ற மைதாங்களில் அவர் எதிர்கொண்டு ஆடிய விதம் பெரியது.

washington sundar
பிரிஸ்பேனை விட அவர் இங்கு ஆடியது சிறந்த இன்னிங்ஸ். ஒருபுறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஸ்பாட், இன்னிங்சில் பின் தங்கிய நிலை, என இருந்த போதிலும் இவர்கள் (சுந்தர், அக்சர், பண்ட்) அதனை பற்றி யோசிக்கவில்லை. அவர்களின் இயல்பான கேம்மை ஆடினர்.
அன்று எனக்கு இருந்ததை விட சிறப்பான திறமை சுந்தரிடம் உள்ளது. தமிழ்நாடு தேர்வாளர்கள் அல்லது தினேஷ் கார்த்திக்கிடம் பேசி அவரை டாப் 4 இடங்களுக்குள் ஆடுமாறு செய்ய வேண்டும். அவர் தகுதியானவர், அதிக ரன்களை குவிப்பார். அதேசமயம் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கட்டாயம் இந்தோயாவுக்கு சிறப்பான நம்பர் 6இல் ஆடும் வீரராக மாறுவார்; அதாவது 60, 70 ரன்கள் மற்றும் 20 ஓவர் வீசுவது. அந்த காலகட்டத்தில் அதுவே என் பணி, அதனை இவர் சிறப்பாக செய்வார்.” என சொல்லியுள்ளார்.
