புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கடைசி படத்தில் விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் அறியப்பட்டாலும் அவர் தனது கடைசிப் படத்தில் எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் என்பது பற்றி ஊடகங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுபற்றி சமூக வலைதளங்களில் புதிய தகவல் வெளியாகிறது.

விஜய்யின் கடைசிப் படம்

விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடல் வெளியிடப்பட்டு, இக்கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி விஜய் பிஸியாக இருப்பதுடன், தனது கடைசி படமான விஜய் 69 படத்தில் நடித்து வருகிறார். இக்கட்சி பற்றி அறிக்கும் போதே தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக மக்கள் பணியாற்றப் போவதாக அறிவித்திருந்தார்.

சமீபத்தில் வெங்கட் பிரவு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படம் ரிலீஸாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்த நிலையில், விஜயின் கடைசிப் படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது. அதன்பின், வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஹெச்.வினோத் தான் இப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை விஜய் தரப்பும், ஹெச். வினோத் தரப்பும் உறுதிப்படுத்தவில்லை என்பதால் ரசிகர்கள் இதுபற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பியும், இதுகுறித்த விவாதங்களிலும் ஈடுபட்டனர்.

அதன்படி, சமீபத்தில் KVN புரடக்சன் நிறுவனம் விஜயின் கடைசிப் படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்து, இதில், விஜயுட இணைந்து அனிமல் பட புகழ் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜாஹெக்டே, மமிதா பைஹூ,பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவித்து போஸ்டரும் வெளியிட்டது. இப்படத்தில் விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க விருப்பதாகவும், ஹெச்.வினோத் தீரன் படம் மாதிரி த்ரில்லிங்காகவும் அதே சமயம் சமூக கருத்துள்ள படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகிறது.

தி கோட் படத்தில் விஜய்யின் சம்பளம்

இந்த நிலையில், ஏற்கனவே, மாஸ்டர், வாரிசு, லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தி கோட் படத்திலும் விஜய் ( ரூ.230 கோடி) சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. எனவே இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் விஜய் என சமீபத்தில் தகவல் வெளியாகின. விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகும், அவரை வைத்து படம் தயாரித்தால் போட்ட பணத்தை படம் ரிலீசான சில நாட்களில் பெறலாம் என தயாரிப்பாளர்கள் எண்ணுவது, லாபம் அடைவதும் கூட அவர் கேட்கும் சம்பளத்தை ஜிஎஸ்டியுடன் கொடுக்க கியூவில் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தி கோட் படமும் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் குவித்த நிலையில் அவர் சினிமாவில் நடிக்கவிருக்கும் கடைசிப் படமாக விஜய்69 படத்திலும் அவர் கேட்டதைவிட அதிகம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்தது. அதன்படி, கேவிஎன் புரடக்சன் நிறுவனம் வரலாற்றில் இடம்பிடிப்பதுபோல் விஜயின் கடைசிப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. எனவே இப்படத்தில் நடிக்க விஜய்க்கு இதுவரை இந்திய சினிமாவில் யாரும் வாங்காத அளவு ரூ.275 கோடி சம்பளம் முன்கூட்டியே ஒரே பேமண்டாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் விஜய்

இதுகுறித்து விவாதம் நடந்து வரும் நிலையில் இந்த அளவு சம்பளம் கொடுக்கப்பட்டது பற்றி வெளியாகும் தகவலின்படி, விஜய் தனது கடைசிப் படத்தில் நடிக்க ரூ.270 கோடி சம்பளம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கு எனவும், ஆனால், இந்த சம்பளத்தை அவர் மொத்தமாக வாங்க வாய்ப்பில்லை. முதலில் ஐம்பது சதவீதம் முதலில் வாங்கிவிட்டு, அதேசயம் ஒவ்வொரு ஷெடியூல் முடியும் போது மீத சம்பளத்தை அவர் வாங்கிக் கொண்டே வருவார் எனவும், டப்பிங் முடியும் முன் மொத்த சம்பளத்தையும் வாங்கிவிடுவார் என தெரிகிறது.

விஜய் நடிக்கும் படங்கள் தியேட்டரில் திருவிழா மாதிரி தான் ரிலீஸாகும். இதில் டிக்கெட் கலெக்சன், ஆடியோ ரைட்ஸ், டிஜிட்டர் ரைட்ஸ், சேட்டிலைட் ரைஸ்ட் இதெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தால் விஜய் படத்தின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு அவரது படத்தின் ஃப்ரீ பிஸினஸே ஆகிவிடும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்தளவுக்கு விஜய் கோலிவுட்டில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பதால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க பணம் புழங்கும் தயாரிப்பாளர்கள் காத்திருப்பதாகவும், அவர் அரசியலில் இறங்கியுள்ளது, சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்பதுதான் அவர்களுக்கு வருத்தமே தவிர, அவர் கேட்கும் சம்பளத்தின் அளவு அல்ல, அதனால்தான் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களிலும், அதற்கு வரி கட்டுவதிலும் விஜய் முன்னிலையில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது.

- Advertisement -

Trending News