வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கங்குவா கதை சூர்யாவுக்கு முன் அஜித்திடம் கூறப்பட்டதா? சிறுத்தை சிவா விளக்கம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் விரைவில் தியேட்டரில் உருவாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பிரபல யூடியூப்புக்கு பேட்டியளித்த இயக்குனர் சிறுத்தை சிவா ‘’அஜித் சார் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்’’ கூறியுள்ளார்.

கங்குவா பட புரமோசன்

சூர்யா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பின் புதிய படம் எதுவும் ரிலீஸாகவில்லை. அந்தப் படமும் கவலையான விமர்சனங்களைத்தான் பெற்றது. எனவே இரண்டு ஆண்டுகளாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில், தேஸ்ரீபிரசாத் இசையில், கங்குவா படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, பாடல்கள், டீசர், டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே கங்குவா படம் ரிலீசாகவிருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு வழிவிட்டு கங்குவா படத்தை வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தின் புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என்று இப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து வருகிறார்.

3டி தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக பல மொழிகளில் ரிலீசாகவுள்ள தமிழ்ப்படம் ரூ.1000 கோடிக்கு வசூல் குவித்தால் நல்லதுதான் சினிமாத்துறைக்கு நல்லதுதான் என்று சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்துகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் பேட்டியளித்தனர். அப்போது சிறுத்தை சிவா கூறியதாவது: இப்படம் பழங்குடியினரின் வாழ்வியலை பற்றிய படமாக இருக்கும். அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில், சிறுத்தை படத்திற்குப் பின் சிவா அறியப்பட்டாலும், அஜித்துடன் தொடர்ந்து, வேதாளம், விசுவாதம், விவேகம் ஆகிய படங்கள் இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தனர். இந்த நேர்காணலில் கங்குவா படம் பற்றியும் இந்தக் கதை பற்றி அஜித் சாரிடம் கூறினார்களா? இந்தக் கதைப் பற்றி கூறியிருந்தீர்கள் எனில் அதற்கு அவர் என்ன சொன்னார்? என்று ஆங்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவா பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிவா கூறியதாவது:

கங்குவா படம் ஆயிரம் பேர் 2 பேர் இருக்கிறார்கள் என்பதல்ல, ஒரு தனியறையில் பேசப்பட்ட விஷயம் தனிமனிதனுக்குள் உருவான விசயம் காட்சியாக மாறியதே, இத்தனை பேரின் உழைப்பில் மூலம் உருவாகியுள்ளதே அதுவே வெற்றிதான். தமிழ் சினிமா இந்திய சினிமாவில் கிராண்டியருக்கு தயாராகிவிட்டது. இப்படத்தில் நட்டி சிறப்பாக நடித்துள்ளார். சிங்கில் டேக்கில் ஒரு ஷாட்டை ஓகே செய்தார்.

இப்பிரமாண்டத்தை எடுக்க நான் எடிட்டராக பணியாற்றியதே காரணம், இப்படத்தைப் பொருத்தவரை, சூர்யா சார் இதுவரை பண்ணாத கதை, அதில் ஒன்று நிகழ்காலம், மற்றொன்று காலக்கட்டம் சொல்ல முடியாத காலம். ரெண்டு வேரியேசன் அவர் பண்ணவில்லை, ஃபேன்சி ஸ்டோரி மற்றொன்று கங்குவா நெருப்பு மாதிரி கேரக்டர் என்று கூறினார்.

அஜித்துடன் அழகான டிராவல்

மேலும், 2012 லிருந்து 2024 வரை 12 ஆண்டுகள் அஜித் சாருடன் டிராவல் பண்ணி வருகிறேன். அது அழகான டிராவல். நிறைய விஷயங்களை ஷேர் செய்து வருகிறேன். அஜித் சார் என்னிடம் நிறைய டேலண்ட் இருக்கிறது. அதை எக்ஸ்ப்ளோர் செய் என்று கூறுவார். நீ புதுப்புது இடங்களுக்குப் போகனும் என்று கூறி என்னை மனசார வாழ்த்துவார். எனக்குள் இருந்த கான்பிடன்ஸ் லெவல் இத்தனை மடங்கு உயர மிக முக்கியமான காரணம் அஜித் சார். அவர் வழிகாட்டி, பிலாசபர். அஜித் சாரிடம் கங்குவா கதையை கூறியபோது நன்றாக பண்ணு என்று ஊக்குவித்தார். பீல் குட் படம் பண்ண ஆசையுண்டு. ஆனால் பட்ஜெட் உள்ளது. அதில் சாத்தியப்படுமா? என்றால் இப்போது காலம் கனிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிறுத்தை சிவாவின் முந்தைய படம் அண்ணாத்த சரியாகப் போகவில்லை. இப்போது கங்குவா படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளதால் இவ்விரு படங்களும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அஜித்துக்கு நெருங்கிய நண்பர் என்பதால் கங்குவா வெற்றிக்குப் பின் மீண்டும் அஜித்துடன் இணைந்து சிவா புதிய படம் இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

Trending News