சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவரை தோற்கடித்தன. அவரது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் தோல்வியடைந்த மன்னனின் பட்டத்து இளவரசிகளையும், ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ, சுல்தானோ விரும்பினால் அவளை அவருக்கு விருந்தாக்கிவிடுவார்கள்.

இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத்தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப்புரத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அதிகம் படித்தவை:  தொடங்கியது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் ! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் !

அன்றிரவு தூங்கச் சென்ற சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி பார் போற்றும் பேரழகி.

இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தில் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச்சீலையை விலக்கி பார்க்கிறார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா, நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்.!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலை குனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை கையெடுத்து கும்பிடுகிறாள்.

அதிகம் படித்தவை:  எல்லாம் தல கத்துகொடுத்தது தான்..! எல்லா புகழும் தோனிக்கே..

தனது தளபதியை சினந்து கொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே தரை மட்டமாக்கியிருக்கிறது.

இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.