Sports | விளையாட்டு
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் ஒரு வருடம் தடை செய்யப்பட்ட டேவிட் வார்னரின் புது அவதாரம் .

ஐசிசி கூட ஆஸ்திரேலிய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிதாக தணடனை கொடுக்கவில்லை. எனினும் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான தண்டனையை விதித்தது. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு ஒரு ஆண்டு விளையாட தடையும், பான்க்ராப்ட்டுக்கு 9 மாதம் தடை விதித்தது.
ஐபில் போட்டிகளிலும் வார்னர் மற்றும் ஸ்மித் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்க உள்ள ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் ஒரு நாள் போட்டிகளில் வர்ணனையாளராக வார்னர் பணியாற்ற ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கமென்டரியில் வார்னர்
ஜூன் 13ம் தேதி இப்போட்டிகள் தொடங்குகிறது. ஆஸி அணிக்கு டிம் பாயின் புதிய தலைவர் மற்றும் ஜஸ்டின் லங்கார் பறிச்சியாளர். கார்டிபில் நடக்கும் இரண்டாவது போட்டியில் (ஜூன் 16) இருந்து வார்னர் கமென்டரி செய்யவாராம்.
அதன் பின் ஜூன் 28ம் தேதி துவங்கும் குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாட சென்றுவிடுகிறார். இவருடன் ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த போட்டியில் வேறு அணி சார்பில் கலந்துகொள்கிறார்.
