Sports | விளையாட்டு
அப்பாடா! பெருமூச்சுவிட்ட இந்திய ரசிகர்கள்.. டி20 தொடரிலிருந்து விலகிய அதிரடி வீரர்..
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 2 ஆம் தேதி கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்ற நிலையில்தான் இருந்தது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட சிறந்த பந்து வீச்சை கொண்டது. இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும் திறம்பட செயல்படவில்லை.
இந்திய அணி பந்து வீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டனர். இந்தியா பேட்டிங்கில் வலுவான அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலியா கொடுக்கும் இமாலய டார்கெட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை. மேலும் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்தது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் பில்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டு உடனே பெவிலியன் திரும்பினார்.
மேலும் அடுத்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வார்னர் இடம்பெற மாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், அவரது காயம் அதிகமாகக் கூடாது என்ற காரணத்தினாலும் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் அவர் காயத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் டி20 தொடரில் இருந்து அவரை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

warner-cinemapettai.jpg
