Connect with us

Cinemapettai

முருகன் இட்லி தயாரிப்பு கூட உரிமம் ரத்து ஏன்.. பகீர் காரணம்

murugan-idly-shop-suspended

Tamil Nadu | தமிழ் நாடு

முருகன் இட்லி தயாரிப்பு கூட உரிமம் ரத்து ஏன்.. பகீர் காரணம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள முருகன் இட்லி தயாரிப்பு கூடத்தில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டதாக வந்த புகார்கள் வந்ததால் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த உணவு தயாரிப்பு கூட உரிமத்தை ரத்து செய்தனர்.

சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு மொத்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து தான் உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் முருகன் இட்லி கடை உணவில் புழுக்கள் இருப்பதாகவும் தரமில்லாமல் இருப்பதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் முருகன் இட்லி கடை உணவுகள் தரமில்லை என புகார்களும் வந்தன.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தை சோதனை நடத்தினர். இந்த ஆய்வின் போதுஉணவு கூடத்தில் பூச்சி தடுப்பு நடவடிக்கைள் கடைபிடிக்கவில்லை மற்றும் உணவு வகைகள் சுகாதரமின்றி இருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து இந்த குறைகளை 15 நாளில் சரி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர்.

இதற்கிடையே பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக வாட்ஸ்-அப் மூலம் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லி கடை தயாரிப்பு கூடத்தை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.

அப்போது முறைகேடு இருப்பதாக தெரிய வந்த நிலையில், முருகன் இட்லி தயாரிப்பு கூட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நோட்டீஸ் ஓட்டினர். மேலும் உரிய விளக்கம் அளிக்கும் வரை இந்த உணவு தயாரிப்பு கூடம் இயங்க கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top