Connect with us

Cinemapettai

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு.. இம்ரான் கான் மிரட்டல் பேட்டி

imran-khan-modi

India | இந்தியா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு.. இம்ரான் கான் மிரட்டல் பேட்டி

நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நியூயார்க்கில் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை இருநாடுகளும் தணிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரிடம் இந்த கருத்துக்களை டிரம்ப்  கூறியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூயார்க் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால்  அடைபட்டு உள்ளார்கள்.    மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இயங்காமல் உள்ளது இயங்கவில்லை. செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றது.

80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன்எப்போதும் இல்லாத ஒரு நிலை. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top