Vikram Vedha

பலருக்கு இவரது பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இவரது புகைப்படம் கண்டால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும். ஆம் விக்ரம் வேதா படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்கள் இதயத்தையும் ஆக்கிரமித்த அழகிதான் இந்த ஷ்ரதா ஸ்ரீநாத். இதற்கு முன் இவர் நடித்திருந்த யூ டர்ன், காற்று வெளியிடை போன்ற அனைத்து படங்களிலும் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு வெகுவாக ரசிகர்களால் பேசப்பட்டது.

சினிமாவில் இவர் அறிமுகமானது மலையாள படத்தில்தான். அந்த படத்தின் பெயர் kohinoor. ஆனால் அந்த படம் இவருக்கு பெரிய இடத்தை பெற்றுத்தரவில்லை. அதன் பின் கன்னடத்தில் இவர் நடித்திருந்த திரில்லர் படமான யூ டர்ன் படமே இவர் மேல் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வைத்தது.

ஷ்ரதா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை இந்தியன் ஆர்மியில் பணிபுரிந்தவர், அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. தந்தை இராணுவத்தை சேர்ந்தவர் என்பதால் சிறு வயது முதல் ராஜஸ்தான், போபால், உத்திரகண்டு, கர்நாடகா, அஸ்ஸாம், தெலுங்கானா போன்ற பல இடங்களில் வாழ்ந்தவர். அதனால் பல மொழிகளில் பேசும் திறனுள்ளவர்.

தெலுங்கானாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பாங்களுரில் தனது வழக்கறிஞர் படிப்பை தொடங்கினார். ரியல் எஸ்டேட் லாயராக பணியாற்றி வந்த ஷ்ரதா ஸ்ரீநாத் சில நாடகங்களிலும், விளம்பரங்களிலும் பகுதி நேரமாக நடித்துவந்தார். திடீரென்று 2015ம் ஆண்டு ஒரு கன்னடத் திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதற்கான ஒத்திகையும் நடந்து முடிந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. அடுத்ததாக இவருக்கு வந்த வாய்ப்புதான் மலையாளத் திரைப்படமான கோஹினூர், இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இருப்பினும் இந்த படத்தின் அறிமுகம் இவரை கன்னடத் திரைப்படமான யூ டர்ன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. யூ டர்ன் படம் பெரு வெற்றி பெற்றதால் அதனை தொடர்ந்து முங்காரு மேல் 2, உர்வி போன்ற கன்னடப்படங்களில் நடித்தார்.

தமிழில் இவரது முதல் படம் காற்று வெளியிடை, இதில் இரண்டாம் கதாநாயகியாக வந்தாலும் இவர் அடுத்து நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து தமிழ் ரசிகர்களுக்கு இவரை கொண்டு சேர்த்தது. அதை தொடர்ந்து தற்போது ரிச்சி என்னும் தமிழ் படத்தில் நிவின் பாளியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாடச்செய்து வருகிறது. அந்த அளவிற்கு வித விதமாக பல்வேறு உடைகளில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இதோ அந்த கிளு கிளு புகைப்படங்களுக்கான லிங்க் உங்களுக்காக https://www.instagram.com/shraddhasrinath/