Tamil Cinema News | சினிமா செய்திகள்
இவங்க உடம்ப குறைச்சது நடிக்கவா? இல்ல கல்யாணத்துக்காகவா? லட்சுமி மேனன் பதிலால் குழம்பிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ‘சுந்தரபாண்டியன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். அதைத்தொடர்ந்து இவர் ‘கும்கி’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இதனை அடுத்து லட்சுமி மேனன் குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், மஞ்சப்பை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அண்மையில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த லட்சுமி மேனன் தான் சிங்கிள் இல்லை என்று பதில் அளித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது சில வருடங்களாக லட்சுமிமேனன் தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் படிப்பில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறி படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார்.
மேலும் சமீபத்தில் ரசிகர்களுடன் லட்சுமி மேனன் ‘கியூ ஏ செக்ஷன்’ நடத்தியபோது, அதில் ஒரு ரசிகர் ‘நீங்க சிங்கிளா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

lakshmi-menon-cinemapettai
இதற்கு பதிலளித்த லட்சுமி மேனன் ‘நோ ஐ அம் நாட் சிங்கிள்’ என ரசிகர்களுக்கு ஷாக் அளிக்குமாறு பதிலை கொடுத்துள்ளார்.
இந்த காரணத்தால் லட்சுமிமேனன் யாரோ ஒருவரை காதலித்து வருகிறார் என அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.
இதையடுத்து மேலும் திருமணத்தை குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு ‘ஓவர் ரெட்டட் சிட்’ என பதிலளித்துள்ளார் லட்சுமி.
இதனால் இவருக்கு தற்போது திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்பது தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.
மேலும் தற்போது லட்சுமி மேனன் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
