டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சர்ச்சை சாமியார் ஓம் ஸ்வாமியை பொதுமக்கள் செம மாத்து மாத்தியதில், கழன்று விழுந்த விக்கோடு தப்பி ஓடினார்.

இந்தி சேனலின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொடர்ந்து பல விரும்பதகாத செயல்களை செய்ததன் மூலம், போட்டி தொடங்கி 80வது நாளில், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஓம் சுவாமி. அதனால் கோபம் அடைந்து, அந்நிகழ்ச்சியை நடத்தி வரும் சல்மான்கானை கன்னத்தில் அறைந்து விட்டதாக பொய்யாக கூறி, விளம்பரம் தேடிக்கொண்டார் ஓம் சுவாமி.

இதனைத் தொடர்ந்து மீடியாக்களிடம் பிரபலமடைய பப்பி ஷேம் வீடியோக்களை வெளியிடுவது இந்த சாமியாரின் சீப் செயல். மாடல் ஒருவர் பிக்கினி உடையில் சாமியாரைசுற்றி சுற்றி வந்து ஆடுவது, பின்னர் தியானம் கலைந்து செக்ஸி லேடியுடன் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

டாப்லெஸ் யோகா

இந்நிலையில் மாடல் அழகி ஒருவருக்கு டாப்லெஸ் யோகாவை சொல்லிக்கொடுக்கும் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தினார். ஒரு டாப்லெஸ் மாடல் அழகியை அருகில் அமர வைத்து, யோகா சொல்லித்தரும் ஆபாசத்தின் உச்சமான ஒரு வீடியோவை வெளியிட்டு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதோடு கிருஷ்ணன் கோபியருடன் இருப்பது போல தான் இந்த வீடியோக்கள் எல்லாம் என்று சாக்கு போக்கும் சொன்னார்.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் இடத்தை ஆக்கிரமித்த விஜய் ஆண்டனி ??

 

 

தர்ம அடி

இதனிடையே டெல்லியின் விகாஸ் நகர் பகுதியில் நாதுராம் கோட்சேவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசுவதற்காக மேடை நோக்கி வந்த சாமியார் ஓம் ஸ்வாமியை அங்கிருந்தவர்கள் சிலர் தாக்கத் தொடங்கினர். பொதுமக்களில் ஒரு குழுவினர் ஓம்ஸ்வாமியின் முடியை பிடித்து அடிக்க முற்பட்ட போது விக் கழன்று விட்டது.

அதிகம் படித்தவை:  அன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் !

 

 

விக்குடன் தப்பி ஓட்டம்

பொதுமக்களின் தர்ம அடி வாங்கியதில் அதிர்ச்சியடைந்த ஓம் ஸ்வாமி, விக்கை கையில் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். அவருடன் வந்திருந்த சிலர் ஓம் ஸ்வாமியை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர்.

வைரலாகும் வீடியோ

இது வரை கிளு கிளு வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்து வந்த ஓம் ஸ்வாமி இந்த முறை மக்களிடம் வாங்கும் தர்ம அடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடிவாங்கிய பின்னரும் அசராமல் இது தொடர்பான விவாதங்களிலும் கலந்து கொள்கிறார் ஓம் ஸ்வாமி.