வி.இசட்.துரை

நம்மில் பலருக்கு பரிச்சயப்பட்ட பெயர் தான். அஜித்தை வைத்து சினிமா பின்புலத்தில் “முகவரி” படம் வாயிலாக நிரந்தர மிக்கவை பெற்றவர். விக்ரமுடன் ‘காதல் சடுகுடு’, சிம்புவுடன் ‘தொட்டி ஜெயா’, பரத்துடன் ‘நேபாளி’, ஷ்யாமுடன் ‘6 மெழுகுவர்த்திகள்’ மற்றும் லேட்டஸ்ட் ஆக சமுத்ரகனியுடன் “ஏமாளி”. இதுவே இவரின் சினிமா பயோடாட்டா. கோடம்பாக்கத்தில் 18 வருடங்களாக இருந்தும் மனிதர் வெறும் 6 படங்களை மட்டும் தான் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அருவி படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்த ஸ்வேதா சேகர் தன் இன்ஸ்டாக்ராம்மில் இயக்குனருடன் உள்ள போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

மேலும் அவர் “ஹிந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் உள்ளேன். இயக்குனர் துறையுடன் மிகவும் சிறந்தவர். இந்த ப்ரொஜெக்டில் நான் இறக்குவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். ஜனவரியில் இந்த சகிரிப்ட்டை ரெடி செய்துள்ளார். நான் போனவாரம் தான் இயக்குனரை மீட் செய்தேன். ஸ்கிரிப்ட் படிக்கும் பொழுது தான் உணர்ந்தேன் என் கதாபாத்திரத்தின் பெயரும் ஸ்வேதா தான்.” என்று கூறியுள்ளார்.

விரைவில் மற்ற அதிகாரபூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.