வி வி எஸ் லட்சுமண்

ஒரு காலத்தில் இந்தியாவின் பான்டஸ்டிக் 4 ல் சச்சின், கங்குலி, ட்ராவிடுடன் ஜோடி போட்டவர். இந்தியாவிற்க்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்கள் எடுத்தவர். கொல்கத்தாவில் ட்ராவிடுடன் ஜோடி சேர்ந்து இவர் அடித்த 281 தான் இவரின் அதிகபட்ச ஸ்கோர். ஆஸ்திரேலிய அணிக்கு லட்சுமண் என்றுமே சிம்ம சொப்பனம் தான். இன்ற சூழ்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின் ஐபில் இல் ஹைதரபாத் அணிக்கு கோச்சிங்கில் உதவி செய்து கொண்டும். பிற  நாட்களில் வர்ணனையாளராகவும்  பணியாற்றி வருகிறார்.

ரஸ்ஸல் அர்னோல்டு

இலங்கை உருவாக்கிய பல ஆல் ரௌண்டர்களில் இவரும் ஒருவர். மத்திய வரிசையில் பேட்டிங் இறங்குவது, இக்கட்டான சூழ்நிலையில் ஸ்பின் பந்து வீசுவது என்று தன் பங்கை தரமாக அணிக்கு அளித்தவர். தன் ஓய்வுக்கு பின் ஐ சி ல் இல் சென்னை சூப்பர்ஸ்டார் அணிக்கு விளையாடினார், பின்னர் முழு நேர வர்ணனையாளர் ஆகிவிட்டார்.

வர்ணனையாளர்

எந்த விளையாட்டையுமே சுவாரசியம் ஆக்குவதில் முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு. பல ஜாம்பவான்களை சேனல் உரிமையாளர்கள் தங்கள் குழுவில் வைத்துக்கொள்வார்கள். பல வர்ணனையாளர்கள் தங்கள் நாட்டின் அணி விளையாடும் பொழுது பாரபட்சமாக பேசுவது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான். உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டோமே ஆனால் பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா, இங்கிலாந்தின்  கெவின் பீட்டர்சன், பங்களாதேஷின் அக்தர் அலி காண் போன்றோர் ஒரு சிலர்.

இந்நிலையில் ரஸ்ஸல் அர்னோல்டு தன் ட்விட்டரில்

‘ டெஸ்ட் தொடர் 1 – 0 என்ற கணக்கில் முடிந்தது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும் ஒரு நாள் தொடர் 5 – 0 என்று முடியாது, சில மாதங்களுக்கு முன்பு போல்.’ என்றார்.

இந்திய அணி கடந்த  இலங்கை சுற்றுப் பயணத்தின் பொழுது அணைத்து டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று வைட் வாஷ் செய்தது. அதே போல் இம்முறை நடக்காது என்று சூசகமாக சொல்லினர்.

இதற்கு பதில் தரும் வகையில் லட்சுமண்..

‘ கண்டிப்பாக ரஸ்ஸல். நீ சொல்வது நிச்சயம் சரி தான், ஏன் என்றால் இது  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடர்.’

எனவே 5 – 0 என்று வர வாய்ப்பில்லை என்று குசும்பாய் பதில் கூறினார். இந்த டீவீட்டை பலரும் ரீ- ட்வீட் செய்தனர். நெட்டிசன்கள் பலரும் அர்னோல்டு மற்றும் இலங்கை ரசிகர்களை இந்த சம்பவத்தை வைத்து வறுத்தெடுக்கின்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.