Sports | விளையாட்டு
நம்பர் 4 பொசிஷன் கோலிக்கு செட் ஆகாது- லட்சுமண் கொடுத்த விளக்கம்
இந்தியா – ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான தொடர் நடந்து வருகிறது. தவான் – ரோஹித் ஒபெநிங் இறங்க ராகுல் நம்பர் 3, அடுத்ததாக கோலி இறங்கினார். இந்த முடிவும் இந்தியா குறைவாக ரன் அடிக்க காரணம் என சொல்லப்பட்டது. ராகுல் அல்லது தவான் எவரேனும் ஒருவர் நின்று ஆடி சதம் அடித்திருந்தால், போட்டி வேற விதமாக மாறியிருக்கும், ஆனால் அது நடக்கவில்லை. டி 20 யில் பேட்டிங் பொசிஷன் மாற்றிய பொழுது பெரிய வித்தியாசம் தெரியவில்லை. எனினும் 50 ஓவர் போட்டி, ஆஸ்திரேலியா போன்ற டீம்மிடம் இந்த முயற்சி செய்திருக்கக்கூடாது.
இது பற்றி வி வி எஸ் லட்சுமண் சொல்லியுள்ளது இது தான் …
“இது வேலைக்கு ஆகாது. சச்சின் உலகின் மிகச்சிறந்த வீரர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அவரை நான்காவது வீரராக களமிறக்குவதை விரும்ப மாட்டார்.
அணியின் சிறந்த பேட்ஸ்மேன் எப்பொழதும் அதிக பந்துகளை எதிர்கொள்லவது அவசியம். அப்பொழுது தான் சரியான வகையில் போட்டியை கொண்டு சென்று, டீம்மிற்கு வெற்றியை தேடித்தர முடியும். குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற தரமான பவுலிங் கொண்ட அணிக்கு எதிராக இந்த சோதனை முயர்சியை செய்ய வேண்டிய அவசியமில்லை.
சூப்பர் பேட்டிங் பார்மில் உள்ள கே.எல் ராகுல் மற்றும் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவன் என இருவரையும் அணியில் சேர்த்து விலையாட வேண்டும் என்ற நோக்கம் புரிகிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் ராகுலை நான்காவது இடத்தில் களமிறக்கலாம். கோலி வழக்கம் போல மூன்றாவது இடத்தில் களமிறக்கலாம்” எனக்கூறியுள்ளார்.
உலகக்கோப்பையில் தவானுக்கு காயம் ஏற்படும் முன்பு வரை நம்பர் நான்கில் ராகுல் தான் ஆடினார். எனவே அதுவே ஏற்ற ஸ்பாட். இல்லையெனில் தாவன் அவர்களை நீக்கிவிட்டு ஒபெநிங் இறக்கவேண்டும்.
