கொலை மிரட்டல் விடுறாங்க என்ற சீனு ராமசாமி.. அதற்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் சேதுபதி நடிகை இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 படம் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்தது.

இதில் பலரும் விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட நண்பர்கள் மற்றும் சினிமா துறையினர் பலர் கோரிக்கை விடுத்தனர்.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்ட சீனு ராமசாமியும் விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் யாரோ சீனு ராமசாமிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கெட்ட வார்த்தை அசிங்க அசிங்கமாக திட்டுவதாகவும் ஆதரவு கேட்டு இன்று முதலமைச்சருக்கு ட்விட்டர் வழியாக கோரிக்கை விடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் அதற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் விஷயத்தைச் சொன்ன சீனு ராமசாமிக்கு, விஜய்சேதுபதி இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாதீர்கள் என கூறியது அவருக்கு கவலையை கொடுத்துள்ளதாம்.

இதுபோன்று போலியான மிரட்டல்கள் வரத் தான் செய்யும் எனவும் ஆறுதல் கூறியுள்ளாராம்.

Vijay Sethupathi Seenu Ramasamy