Connect with us

Cinemapettai

அடுத்த படத்தையும் OTTக்கு தூக்கிக் கொடுத்த தயாரிப்பாளர்.. செம கடுப்பில் விஜய் சேதுபதி

vijay-sethupathi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த படத்தையும் OTTக்கு தூக்கிக் கொடுத்த தயாரிப்பாளர்.. செம கடுப்பில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராக விஜய் சேதுபதியின் படங்கள் அனைத்தும் தற்போது கொரோனா சூழலில் திரையரங்கில் திரையிடாமல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ என்ற படமானது ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு தற்போது விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணிக்கு நல்ல வெற்றி கிடைத்ததால் தற்போது மூன்றாவது முறையாக ‘மாமனிதன்’ படத்தில் மறுபடியும் இக்கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என மூன்று ஜாம்பவான்களும் இப்படத்திற்கு இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

‘மாமனிதன்’ படத்தை தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்வதற்கான உரிமையை ஏற்கனவே ஜீ தமிழ் நிறுவனம் பெற்ற நிலையில், தியேட்டரில் திரையிடாமல் ஓடிடி தளத்தில் திரையிட போவதாக எடுக்கப்பட்ட முடிவிற்கு அத்தொலைக்காட்சி நிறுவனம் சம்மதம் தெரிவித்ததால், இப்படிப்பட்ட முடிவை மாமனிதன் படக்குழு எடுத்ததாக தெரிகிறது.

ரசிகர்களுக்கு ஒரு பக்கம் விஜய் சேதுபதியின் படத்தை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் இருந்தாலும், அதை தியேட்டர்ல போய் பார்க்க முடியாத வருத்தத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top