நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படத்தை தொடர்ந்து ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படம் டிக் டிக் டிக். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஜனவரியில் இப்படம் ரிலீசாகிறது.

tik tik tik

இப்படத்திற்கு இமான் தான் இசை. இது அவரின் 100 வது படம். இதற்காக இமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டார் வெங்கட் பிரபு.

” யுவனின் 100 வது படத்தில் நீங்க ஒரு பாடல் பாடுநீங்க, உங்கள் 100 படத்தின் தீம் பாடலை யுவன் பாடியுள்ளார். அந்த படத்தை இயக்கியது நான், இந்த படத்தை இயக்குவது என அசிஸ்டன்ட்.” என்பதே அந்த டீவீட்டின் சாராம்சம்.

Nithin Sathya @ Venkat Prabhu’s Chennai 28 Part 2 Movie Pooja Stills

உடனே ஒரு விஷமமான ட்விட்டர் ஆசாமி … ” உங்கள் அசிஸ்டன்ட் உங்களை விடை சிறந்தவர்” என்று ரிப்ளை அளித்தார்.

உடனே வெங்கட் பிரபுவும் டென்சுன் ஆகாமல்   ” அவ்வாறு அமைந்ததுக்கு நான் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் ப்ரோ” என்று பதில் அளித்தார்.

உடனே ஷக்தி சௌந்தர்ராஜன் “உங்களிடம் உதவியாளராக இருந்ததில் பெருமை படுகிறோம்” என்று பதில் தந்தார்.

வெங்கட் பிரபுவும் ” ஆமாம் டா. நாமெல்லாம் ஒரு மகிழ்ச்சியான குடும்பம்.” என்று டீவீடினார்.

குருவை மிஞ்சிய சிஷியர்கள் தானே ஷக்தி  சௌந்தர்ராஜன், பா. ரஞ்சித் போன்றவர்கள்.