Tamil Cinema News | சினிமா செய்திகள்
வால்வோ நிறுவனத்தின் S60Polestar கார் இந்தியாவில் அறிமுகம்!
வால்வோ நிறுவனம், அதன் புதிய செடான் ரக காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
S60 Pole star எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், வால்வோ நிறுவனத்தின் இந்திய கார் சந்தையில் முதன்மை தயாரிப்பாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படை விலை ரூ.52.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தயாரிப்பான T6 Trim ரக காரினை பின்பற்றி இந்த தயாரிப்பை வடிவமைத்துள்ளதாகவும், தானியங்கி டிரைவிங் முறையையும் பயன்படுத்தலாம் எனவும் வால்வோ கூறியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜீன், 362 பிஹெச்பி, 6000 ஆர்பிஎம் ஸ்பீட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகிறது. என்ஜீன் ஸ்டார்ட் செய்த 4.7 நிமிடங்களில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும். அதிகபட்சமாக, 250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.
இதுபற்றி வால்வோ இந்தியாவின் தலைவர் வான் பான்ஸ்டார்ஃப் கூறுகையில், ‘’போல்ஸ்டார் ரக கார்களைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. இவை மிகவும் வேகமாக பயணிக்கக்கூடியவை என்பதோடு, கையாள மிக எளிதானவை. அத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களாகும். இந்திய வாடிக்கையாளர்கள், போல்ஸ்டார் ரகக் கார்களை நிச்சயம் விரும்புவார்கள்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
