fbpx
Connect with us

8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா ?

Sports | விளையாட்டு

8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா ?

ஐபில் 2019

ஐபில் 2019 வரும் சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூர் நகரில் மதியம் 3 . 30 மனையில் இருந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் . யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும், போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை. ஆனால் வழக்கம் போல சில இளம் வீரர்கள் அதிக விலை கொடுத்து டீம்கள் எடுத்து.

ஹெட்மயர், பூரான் போன்ற வீரர்கள் 4 கோடிக்கு மேல் விலை போனார்கள். 20 லட்சம் பேஸ் விலையில் இருந்த சிவம் துபேய் 5 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்து. அதிரடி ஆல் ரௌண்டார் இவர்.

இந்த முறை அதிக விலைக்கு போனது அதாவது 8.4 கோடிக்கு வீரப்பனை ஆனது இருவர் ஜெயதேவ் உனட்கட் மற்றும் வருண் சக்கரவர்த்தி தான்.

வருண் சக்கரவர்த்தி

தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர். கடந்த ஆண்டு வரை டிவிஷன் நான்கில் ஆடியவர். இதுவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ ..

தஞ்சாவூரை சேர்ந்தவர். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியவர். 13 வயதில் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மான் ஆக இருந்தவர். அதன் பின்னர் SRM யூனிவர்சிடியில் B Arch படித்தார், பின்னர் இரண்டு வருடம் முழு நேர வேலை. பின்னர் க்ளப் கிரிக்கெட் என்று இருந்தது இவரின் கிரிக்கெட் பயணம். வேகப்பந்துவீச்சாளாராக மீண்டும் தொடங்கினார், முட்டியில் காயம் ஏற்பட ஸ்பின் பக்கம் மாறினார். கெட்டதிலும் நல்லதாக அது அமைந்தது இவருக்கு.

 

க்ளப் கிரிக்கெட்டில் அசத்தினார், பின்னர் சி எஸ் கே டீம்மின் நெட் பௌலர் வாய்ப்பு வந்தது. சென்ற ஐபில் இல் சென்னையின் மேட்சுகள் புனேவுக்கு மாறியது. அந்தநேரத்தில் தினேஷ் கார்த்திக் வாயிலாக கொல்கத்தா அணி நெட் பௌலர் வாய்ப்பு கிடைத்தது. பல யுத்திகளை கற்றார். சுனில் நரேனின் சந்திப்பு, நல்ல பயிற்சி தளம் அமைய தானாம்பிகை கூடியது. TNPL போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஆடினார்.

நன்றாக விளையாட முறையே ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரே போட்டியிலும் ஆடினார். அசத்தினார் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஐபில் இல் ஹாட் கண்டெஸ்டண்ட் ஆக மாறினார்.

CV Varun

ஏலத்தில் இவரை எடுக்க கடும் போட்டி நிலவியது. சென்னையிடம் பணம் தீர்ந்துபோக, கொல்கத்தாவும் விளக்க இறுதியாக ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி இவரை எடுத்து. தற்பொழுது அஷ்வினுடன் இணைகிறார் வருண்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Sports | விளையாட்டு

Advertisement

Trending

To Top