fbpx
Connect with us

“அஜித்திக்கும் சிவாவுக்கும் இருப்பது ‘V’ கிடையாதாம்,’VM’ செண்டிமென்ட் தானாம்.”: சொல்லும் அஜித் ரசிகர்கள்.

News / செய்திகள்

“அஜித்திக்கும் சிவாவுக்கும் இருப்பது ‘V’ கிடையாதாம்,’VM’ செண்டிமென்ட் தானாம்.”: சொல்லும் அஜித் ரசிகர்கள்.

விவேகம் படத்திற்கு பிறகு அஜித்தின் படம் என்னவாக இருக்கும்.
அந்த படத்தை இயக்குவது யாராக இருக்கும் என்கிற மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்து வந்தன.

‘விவேகம்’ படத்துக்குப் பிறகு, அஜித் – சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

சிவாவே இயக்க, விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு எல்லாம் பாதி படத்திற்கு மேல் வளர்ந்த பின்னர் வெளியாகின. ஆனால் படம் துவங்கும் முன்னரே விசுவாசம் என அறிவித்துள்ளனர் படக்குழு.

 VISWASAM

{AK58 தலைப்பு அறிவிப்பு.! மதுரைபெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா.! }

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘விசுவாசம்’ என டைட்டில் வைத்திருப்பதன் மூலம் ;இந்தப்படமும் V சென்டிமென்டில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பலரும் பேசி வந்தனர்.

VM sentiment

இந்நிலையில் ஒரு அஜித் ரசிகர் மட்டும் இது வெறும் “v” செண்டிமெண்ட் கிடையாது நண்பர்களே; ஆங்கில எழுத்தான ‘V’யில் துவங்கி ‘M’ல் முடியும் “VM” [VeeraM, VedhalaM,VivegaM] செண்டிமெண்ட் என்று ஸ்டேட்டஸ் போட்டார். இதனை தல ரசிகர்கள் ஆமோதிக்க தொடங்கினர்.

தற்பொழுது இந்த VM விஷயத்தை வைரல் ஆக்கிவருகின்றனர் தல ரசிகர்கள்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் தீபாவளி ரிலீஸுக்கே திட்டமிடப்படுகிறதாம். ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் 2018 தீபாவளிக்கு வெளியாகும் என  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

ஆகமொத்தத்தில் 2018 ஆம் வருட தீபாவளி இப்பவே கலை கட்ட துவங்கிவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top