Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
விஜய் சேதுபதி
கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். பல ஸ்டைல் மற்றும் ஜானர்களில் நடித்த அசத்துபவர். இன்று கோலிவுட்டில் மகா நடிகன் என்ற பெயர் எடுத்துவிட்டார்.
My next film First Look Poster releasing tomorrow at 6pm#VijaySethupathi26
An #SuArunkumar Film | A @thisisyr musical |@yoursanjali @Rajarajan7215 @VANSANMOVIES @irfanmalik83 @mounamravi@CtcMediaboy pic.twitter.com/0qUhKxOyYa
— VijaySethupathi (@VijaySethuOffl) January 15, 2019
இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிப்பில் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் அருண் குமாருடன் இதுவரை “பண்ணையாரும் பத்மினியும்” , “சேதுபதி” என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே வெவ்வேறு ஜானர். இவர்கள் இணையும் மூன்றாவது படம் தான் இது.
சிந்துபாத்
இப்படத்தின் முதல் பகுதி ஷூட்டிங் தென்காசியில் நடைபெற்றது. பின்னர் தாய்லாந்து சென்றது படக்குழு. இப்படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார்.லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
