Tamil Cinema News | சினிமா செய்திகள்
முழு கிராமத்து பெண்ணாக மாறிய VJ ரம்யா.. இவ்வளவு ஒர்க் அவுட் செஞ்சு என்னத்துக்கு? கடைசியில சாணி அல்ல விட்டுட்டீங்களே!
ரசிகர்களால் ரசிக்கப்படும் சில தொகுப்பாளர்களில் VJ ரம்யாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
சமீபகாலமாக தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
அதைப்போல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் 4 வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி ,சாணி அள்ளுவது போன்ற கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
vj-ramya
எனவே புகைப்படத்தில் இருக்கும் ரம்யாவின் இந்த கெட்டப் தான் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ள சங்கத்தலைவன் படத்தில் ரம்யாவின் கதாபாத்திரம் ஆகும்.
ramya-cinemapettai
இருப்பினும் ரம்யாவின் இந்த லுக்கை பார்த்த நெட்டிசன்கள், ‘இவ்வளவு ஒர்க் அவுட் பண்ணி என்னத்துக்கு? கடைசியில சாணி அல்ல விட்டுட்டீங்களே!’ என பங்கம் செய்து வருகின்றனர்.