Connect with us
Cinemapettai

Cinemapettai

இனி சமூக வலைதளத்திற்கு வரமாட்டேன் என்ற VJ ரம்யா.. நீங்க வரலைன்னா சோறு கிடைக்காது பாரு என்ற நெட்டிசன்கள்

vj-ramya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனி சமூக வலைதளத்திற்கு வரமாட்டேன் என்ற VJ ரம்யா.. நீங்க வரலைன்னா சோறு கிடைக்காது பாரு என்ற நெட்டிசன்கள்

ரசிகர்களால் ரசிக்கப்படும் சில தொகுப்பாளர்களில் VJ ரம்யாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமாவுக்கு செல்கிறோம் என்ற முடிவில் அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடு கூட்டும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். நேர்மறை விமர்சனம் வருமென எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் தான் அதிகமாக வந்ததாம்.

இதனால் கடும் அப்செட்டில் உள்ளார் VJ ரம்யா. ஜொள்ளு விடும் ரசிகர்கள் மத்தியில் கண்டபடி திட்டும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் விலகி விட்டு மீண்டும் வருகிறேன் என தனது ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுத்துள்ளார் ரம்யா. இதைப்பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகி விட்டார்கள் போல.

நீங்க சமூக வலைதளத்திற்கு வரலைன்னா எங்களுக்கு சோறு கிடைக்காதா எனும் அளவுக்கு இறங்கி கலாய்த்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக கொஞ்சம் பிரபலமான ஆட்கள் தங்களுக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த மாதிரி சில்லிதனமான வேலைகளை செய்வது உண்டு.

இதற்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் வேணாம், ப்ளீஸ் என கதறினாலும், பலரோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு பொழப்பு எனும் சொல்லும் அளவுக்கு அசிங்கப்படுத்தி வருகிறார்கள் நம்ம ஆட்கள். விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top