Connect with us
Cinemapettai

Cinemapettai

இதனால்தான் எனக்கு விவாகரத்து ஆனது.. முதல் முறையாக வாய் திறந்த VJ ரம்யா

vj-ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதனால்தான் எனக்கு விவாகரத்து ஆனது.. முதல் முறையாக வாய் திறந்த VJ ரம்யா

தமிழ் சினிமாவில் வரவர நடிகைகளுக்கு மவுஸ் இருக்கிறதோ இல்லையோ தொகுப்பாளனிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் உள்ளன. அந்த வகையில் தமிழில் முக்கிய தொகுப்பாளினியாக டிடி, அஞ்சனா, vj ரம்யா போன்றோர் முன்னணியில் இருக்கின்றனர்.

இதில் டிடி மற்றும் VJ ரம்யா ஆகியோர் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு டிடி தனது விவாகரத்து பற்றி கூறியதை போல தற்போது VJ ரம்யாவும் தன்னுடைய விவாகரத்தை பற்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, முதலில் தன்னுடைய திருமணம் காதல் திருமணம் கிடையாது என்றும், பெற்றோர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் திருமணமான சில தினங்களிலேயே தனக்கும் அவருக்கும் செட் ஆகாது என்று தனது வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால் ரம்யாவின் கணவர் தரப்பில் திருமணத்திற்கு பிறகும் இரவு பார்ட்டிகள் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரம்யா சென்றது கணவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை என்றும் கூறி வருகிறார்களாம்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஈடுபடமாட்டேன் என்று தான் ரம்யா திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் இது உண்மையா பொய்யா என்பதை ரம்யா தான் உறுதி செய்ய வேண்டும்.

நம்ம ஊரு கலாச்சாரப்படி கல்யாணம் பண்ண பொண்ணு, புருஷன் குடிகாரனாக இருந்தாலும் கொள்ளைக்காரனாக இருந்தாலும் கட்டிய கணவரை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான்.

ஆனால் சினிமாவை பொருத்தவரை திருமணமான சிறிது நாட்களிலேயே பிரியும் பல ஜோடிகளை பார்த்துவிட்டோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top