தமிழ் சினிமா மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா. அதன் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன் பிறகு பல கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் கூட இறுக்கமான உடையில் விஜே ரம்யா துள்ளி குதித்து விளையாடும் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. சமீபகாலமாக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே ரம்யா. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து தைரியமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில்களை கூறிவருகிறார்.
உங்களது வாழ்க்கையை பற்றி கூறுங்கள் என கூறியதற்கு தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை கூறியிருந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்க முடியாமல் தவித்து வருகிறார் விஜே ரம்யா. அதனால் தனது பொழுதுபோக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ரசிகர்களிடம் என்னைப்போல் கொரோனா ஊரடங்கு எவ்வாறு பொழுது போகிறீர்கள் எனக்கு கேள்வி கேட்டுள்ளார்.
அப்போது ரசிகர்கள் பலரும் தங்களது பொழுது போக்கை ஒவ்வொன்றாக தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு ரசிகை எனது கணவர் என்னை தினமும் அடிக்கிறார், என்னை மிகவும் துன்புறுத்துகிறார் என அந்த லைவ் சேட்டில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய கல்யாண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். பெண்களுக்கான உரிமையை பெண்கள் தான் போராட வேண்டும் என கூறியுள்ளார்.
இதை பார்த்த விஜே ரம்யா நீங்கள் பாதுகாப்பான இடத்தில் அதாவது உங்கள் குடும்பத்துடன் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் எனவும் உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். உங்கள் மனதில் தோன்றியதை மற்றவர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவியுங்கள் எனவும் கூறியுள்ளார்.