ஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் திகழ்ந்துள்ளார்.

VJ-Ramya

இவர் சமூக ஆர்வலராகவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்.

சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டெட் லிப்டிங் போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

VJ-Ramya

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, பளு தூக்கும் வீராங்கனை ஆவார். மேலும், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன் என பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் `சங்க தலைவன்’ படத்தில் டி.வி.தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

VJ-Ramya

அவர் தற்போது ‘கொளஞ்சி’, ‘ஆண் தேவதை’, ‘ஏமாலி’, ‘காலா’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஜோடியாக டி.வி.தொகுப்பாளினியான ரம்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ரம்யா ஏற்கனவே ஓ காதல் கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VJ-Ramya

கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடிக்கிறார். கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.