தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் ஹுசைனை ரெஜிஸ்டர் மாராஜ் செய்து கொண்டார் மணிமேகலை.

manimegalai

சொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும்,  வளர்ந்ததெல்லாம் சென்னைதான். MBA  வரை படித்துள்ளவர்.  கல்லூரியில் முதல் வருஷம் பயிலும் பொழுது , சன் மியூசிக் சேனலின் ஆங்கர் வாய்ப்புக்கு இவரும், இவருடைய   ஃப்ரெண்ட்ஸ் பலரும் அப்ளை செய்தார்களாம். அதில் செலெக்ட் ஆகி தான் சன் டிவியில் நுழைந்துள்ளார் மணிமேகலை.

manimegalai

இன்று சின்ன திரையில் மிக பிரபலம்.  இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டாரமே  உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன் இவர் வீட்டில் நடந்த பிரச்னையால் இவரது சகோதரர் மற்றும் அப்பா இவரை அடித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் அப்பொழுது தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக வும், யாரும் என்னை அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.

manimegalai

இந்நிலையில் வீட்டில் எதிர்ப்பு தொடரவே , இன்று ரெஜிஸ்டர் மாராஜ் செய்து கொண்டுள்ளார். இதனை தன் ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். திடீர் பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையின் மனத்தை மாற்றமுடியவில்லை. எல்லை மீறி போனதால் இந்த முடிவு எடுத்துள்ளேன்.  ஒருநாள் என் தந்தை இந்த முடிவை ஒருநாள் புரிந்துகொள்வார் என்று நிச்சயம் நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹுசைன். ஸ்ரீராம ஜெயம், அல்லா” என்று பதிவு எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் மணிமேகலை !!