”வீட்டிலிருந்து முதல் எதிர்ப்பு குரலோடு ஆரம்பிச்சது. எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன்.

manimegalai

‘அந்த கோர்ஸ் படிச்சு என்ன பண்ணப் போறேன்’னு பெற்றோர் சிகப்புக் கொடி காட்டினாங்க. அந்தக் கோபத்தில் வீட்டிலேயே ஒரு மாசம் உட்கார்ந்திருந்தேன்.

கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா ஒரு காலேஜிக்கு இழுத்துட்டுப் போனாங்க. அங்கே பி.எஸ்ஸி மேத்ஸ் குரூப் மட்டுமே காலியாக இருந்துச்சு. சரி போகட்டும்னு சேர்ந்துட்டேன்.

manimegalai

முதல் வருஷம் படிக்கிறப்போ, சன் மியூசிக் சேனலின் ஆங்கர் வாய்ப்புக்கு நானும் ஃப்ரெண்ட்ஸ் பலரும் அப்ளை பண்ணினோம். எனக்கு மட்டும் ஆடிஷன் அழைப்பு வர, கெத்தாகப் போய் செலக்ட் ஆகிட்டேன்.

‘ஏற்கெனவே படிப்புல சுமார். இந்த லட்சணத்துல ஆங்கரா?’ வீட்டுல திட்டினாங்க. அதையெல்லாம் சமாளிச்சுதான் என் ஆங்கர் பயணத்தை ஆரம்பிச்சேன்.”

manimegalai

நடிகர் விஜய் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்று தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மெர்சசல்’.

இந்தப் படம் தீபாவளி அன்று வெளியாகி பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது. வெளிநாட்டு வசூலிலும் கலக்கிவரும் இப்படம் விரைவில் 50வது நாளை கொண்டாட இருக்கிறது.

manimegalai

இந்த நிலையில் விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளினி மணிமேகலை ஒரு பேட்டியில், ‘‘நடிகர் விஜய்யை ஹாலிவுட்டில் நடிக்க சொல்லி கேட்பேன், அவருடைய நடிப்பு திறமை இங்கு நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது அவருடைய திறமையை ஹாலிவுட் ரசிகர்களுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்தவிட்டது. நடிகர் தனுஷ் ஏற்கெனவே ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இப்போது நம் இளையதளபதியும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் தொகுப்பாளினி மணிமேகலை.