Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்ரா தற்கொலையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் மர்மங்கள்.. ஹேம்நாத் உளறிய உண்மைகள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மக்கள் பலரின் மனதில் முல்லையாக இடம் பிடித்தவர் தான் VJ சித்ரா. அதுமட்டுமில்லாமல், பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சித்ராவுக்கு அங்கீகாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக தான் கிடைத்தது.
மேலும் கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த நடிகை சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா வட்டாரங்களை உலுக்கியது. இதனால் முல்லையின் ரசிகர்கள் பலர், சோகக் கடலில் மூழ்கி உள்ளனர். இந்த நிலையில் சித்ராவின் தற்கொலை முடிவிற்கு காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேமந்த்திடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு, ஹேமந்த்தின் தந்தை, சித்ராவின் தாய், விடுதியின் ஊழியர்கள், சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி குழுவினர், தயாரிப்பாளர் என பல்வேறு தரப்பினருடனும் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், சித்ராவின் இந்த விபரீதமான முடிவிற்கு முக்கியமான காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என்று கூறப்படுகிறது.
அதாவது சின்னத்திரை நடிகர்களுடன் சித்ரா நடனமாடியது ஹேமந்த்க்கு பிடிக்கவில்லையாம். அத்தோடு, அவரை நடிக்க வேண்டாம் என்றும் அடிக்கடி ஹேமந்த் வற்புறுத்தி வந்துள்ளாராம். இதனால் மனம் உடைந்த சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், சித்ரா தற்கொலை செய்த ஒன்பதாம் தேதி அன்று சித்ரா படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு, ‘யாருடன் நடனமாடினாய்’ என்று மீண்டும் கேட்டிருக்கிறார் ஹேமந்த். இதனால் பெரிய தகராறு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தகராறு முற்றிய போது சித்ரா, ‘என்னால் உன்னை விட்டு வாழ முடியாது’ என்று கூறியதற்கு, ‘அப்போ செத்துப்போ’ என்று ஹேம்நாத் கூறியதால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் சொல்லப்படுகிறது.
இந்தக் காரணங்களால் சித்ராவின் தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

vj-chitra-cinemapettai
எனவே, சீரியல்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் போது நிதானமாக இருந்த சித்ரா, தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் நீ அந்த நிதானத்தை காட்டி இருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
