Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்ராவை ஆபாசமாக படம் பிடித்ததாரா உதவியாளர்? திடுக்கிடும் உண்மைகளுடன் வந்த ஆடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்த VJசித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் உலுக்கியது. மேலும் அது தற்கொலையா? கொலையா? என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அவரது கணவர் ஹேமந்த் என்பவரை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே சில திடுக்கிடும் உண்மைகள் சித்ராவின் உதவியாளர் மூலம் வெளிவந்துள்ளது.
விஜய் சித்ராவுக்கு சலீம் என்ற உதவியாளர் நீண்ட நாட்களாக இருந்து வந்தாராம். சித்ரா எந்த ஒரு படப்பிடிப்புக்கும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் இவரை கூட அழைத்துச் செல்வது வழக்கமாம். சித்ராவை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் இவரது வேலையாம்.

vj-chitra-cinemapettai-01
ஆனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த், சலீம் என்ற உதவியாளர் மீது வேண்டுமென்றே பழி போட்டு அவரை வேலையைவிட்டு தூக்கியதாக சமீபத்தில் முக்கியப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சலீம். அதில் சலீம் மீது ஹேமந்த் வேண்டுமென்றே சித்ராவை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதாக குற்றம் சாட்டி வேலையை விட்டு நீக்கி விட்டாராம்.
மேலும் சித்ரா ஹேமந்த்திடம் வசமாக ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதாகவும் முக்கிய பாயிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அது எந்த மாதிரி விஷயம், எதனால் சித்ரா ஹேமந்த்தை விட்டு வெளியில் வர முடியாமல் சிக்கித் தவித்தார் என்ற கோணத்தில் இந்த வழக்கை விசாரித்தால் நிச்சயமாக உண்மை கிடைக்கும் என்கிறார்கள்.
அந்த பொண்ணு இறந்துபோன சோகத்தை விட அவரைப் பற்றி நாளுக்கு நாள் வரும் வதந்திகள் தான் ரசிகர்களை வெறுப்படைய வைத்து வருகிறது. சமீபத்தில்கூட சித்ராவின் மாமனார், அரசியல்வாதிகளுடன் சித்ராவுக்கு தொடர்பு இருந்ததாகவும், அதனால்தான் ஆடி கார், பங்களா போன்றவை வாங்கியதாகவும் அப்பட்டமாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
