வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சித்ரா கைப்பையில் இருந்த கஞ்சா பாக்கெட் மற்றும் சிகரெட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி விஜய் டிவி தொகுப்பாளினி VJ சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் உலுக்கியது. இந்நிலையில் தற்போது அவரின் கணவர் ஹேம்நாத் என்பவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதலில் தற்கொலை என சந்தேகிக்கப்பட்ட சித்ரா கேஸ் பின்னர் கொலை கேஸாக மாறி அனைவரையும் குழப்பம் அடையச் செய்துள்ளது. இருந்தாலும் தற்போது வரை அந்த கேஸில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மக்களுக்கு சென்றடையவில்லை.

இது ஒரு புறமிருக்க சித்ராவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவருடைய மாமனார் கூறியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது குறித்த எந்த ஒரு மறுப்பு செய்தியும் சித்ரா குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் 70 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் மற்றும் இரண்டு அடுக்கு பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சித்ராவின் மீது அவரது மாமனார் குடும்பத்தினர் பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

vjchitra-cinemapettai
vjchitra-cinemapettai

இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. சித்ராவின் கைப்பையில் ஒரு கஞ்சா பாக்கெட் மற்றும் கஞ்சா நிரம்பிய சிகரெட் ஆகியவை கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் சித்ரா போதைப் பழக்கத்திற்கு உள்ளானவரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் பல்வேறு வழக்குகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி பின்னர் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போயுள்ளது. சித்ரா வழக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் தெரிகிறது. எது எப்படியோ, நாளுக்கு நாள் சித்ரா பிரச்சனை பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்தாலும் இன்னும் எந்த ஒரு நியாயமும் கிடைக்காததால் ரசிகர்கள் சற்று வெறுப்படைந்துள்ளனர்.

- Advertisement -

Trending News