Connect with us
Cinemapettai

Cinemapettai

vjchitra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Vj சித்ரா வாழ்க்கையில் சித்து விளையாட்டு காட்டிய மாமனார்.. வெளியான ஆடியோவால் பரபரப்பு!

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஹோட்டல் அறைக்கு வந்து சித்ரா தூக்கு போட்டு இறந்த செய்தி மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி எடுத்தது. பேன்(fan) இல்லாத அறையில் எப்படி தூங்கு மாட்டினார் என்பதுதான் தற்போதைய கேள்வி?

இந்த கேள்வியில் இருந்து தான் சித்ரா தற்கொலை செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் எப்படி சித்ரா கொலை செய்யப்பட்டார் என்பதை அவரது கணவர் ஹேமந்த்திடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவரும் உண்மையை உளறி வருகிறார்.

vjchitra-hemanth-cinemapettai

vj-chitra-hemanth-cinemapettai

அந்த வகையில் முதலில் பிரபல அரசியல்வாதி ஒருவர் சித்ராவை டார்ச்சல் செய்ததாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்சன் என்பவருடன் சித்ராவுக்கு காதல் இருந்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்ததை ரக்சன் வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சித்ராவுக்கு அவரது மாமனார் வழியாகவும் டார்ச்சல் வந்ததாக தெரிகிறது. ஹேமந்த் தண்ணியடித்துவிட்டு தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக சித்ரா கடந்த சில நாட்களாகவே தனது மாமனாருக்கு போன் செய்து பேசியுள்ளார். ஆனால் மாமனார் தொடர்ந்து சித்ராவின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இருவரும் சேர்ந்துதான் சித்ராவை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தேவையில்லாமல் சித்ராவின் மாமனார் இடையில் வந்து, யாரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மகனை கைது செய்திருக்கிறார்கள்? என மீடியா முன் பேட்டி கொடுத்தார்.

இங்கிருந்துதான் சந்தேகம் அதிகமாகி உள்ளது. மேலும் சித்ரா தனது மாமனாரிடம் தினமும் ஹேமந்த் தன்னை தண்ணியடித்துவிட்டு டார்ச்சர் செய்வதாக போன் பண்ணி கதறிய ஆடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த ஆடியோ வெளியான சில நேரத்திலேயே அதை டெலிட் செய்து விட்டனர்.

மேலும் ரக்சன் உடன் இருக்கும் வீடியோ விஷயம் தெரிந்த பிறகுதான் இருவரின் டார்ச்சல் அதிகமாகி விட்டதாகவும் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சனும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

vjchitra-rakshan-cinemapettai

vj-chitra-rakshan-cinemapettai

ரக்சன் வீடியோ ரகசியம் வெளியான அதே நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சக நடிகர் குமரன் என்பவருடன் ரொமான்டிக் காட்சிகள் சென்று கொண்டிருந்தது. இதனால் உடனடியாக சீரியலில் நடிப்பதை நிறுத்த வேண்டுமென மிரட்டி உள்ளனர். மேலும் அந்த சீரியலில் இடம்பெற்ற முத்தக்காட்சிதான் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்ததாம்.

vjchitra-kumaran-kiss-scene

vj-chitra-kumaran-kiss-scene

மொத்தத்தில் சித்ராவின் தற்கொலை வழக்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதை ஆகிவிட்டது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு சமயத்தில் ஒரு பத்து நிமிடம் கடையை அதிகமாக திறந்து வைத்தால் மட்டும் உடனே கைது செய்து அடித்து கொன்று விடுவார்கள்.

Continue Reading
To Top