Connect with us
Cinemapettai

Cinemapettai

vj-chitra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென VJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து!

பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி சமீபத்தில் தான் முதன் தாய், தந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டு செல்வ செழிப்பாக இருந்துள்ளார்.

மேலும் சித்ராவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பை முடித்து விட்டு நேராக ஹோட்டல் அறைக்கு வந்த vj சித்ரா திடீரென தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vj சித்ராவுக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சித்ராவை சீரியலில் நடிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு ரொமான்டிக் காட்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vj-chitra-cinemapettai

vj-chitra-cinemapettai

இதனால் சக நடிகர் ஒருவருடன் முத்தக்காட்சி போன்றவற்றில் நடிக்க வேண்டிய சூழ்நிலை. சினிமாவில் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என அவர் எதார்த்தமாக நடிக்க அதுவே பஞ்சாயத்தாக மாறிவிட்டதாம். இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து வந்த பின்னர் நள்ளிரவில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. மேலும் வருங்கால கணவர் ஹேம்நாத் உடன் தான் அந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார் எனவும், தினமும் வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது vj சித்ராவின் வருங்கால கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் முழுமையான காரணம் என்னவென்று தெரியும் என்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சமயத்தில் கூட vj சித்ரா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீரியல் நடிகர், நடிகைகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Continue Reading
To Top