Connect with us
Cinemapettai

Cinemapettai

vj-chitra-cinemapettai-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்ரா இறந்தது இப்படி தான்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் உளறிய ஹேம்நாத்

பல தொலைக்காட்சிகளில் விஜேவாக பணிபுரிந்தவர் தான் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் மக்கள், ஜீ தமிழ், சன் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக அனைவரும் பேசிக்கொண்டிருப்பது சித்ராவின் மரணத்தைப்பற்றி தான். ஏன் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், மரணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் போன்ற பல கேள்விகள் தற்போது தமிழக ரசிகர்கள் மனதில் உலாவி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் சித்ரா அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடிய ஒரு சக நடிகை என்பதால் சினிமா நண்பர்கள் மூலம் சித்ராவிற்கு பிரச்சனை வர வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அப்படியிருக்கும் நிலையில் இவரது கொலைக்கு யார் தான் காரணம் என்ற விசாரணையை போலீசார் திவிரப்படுத்தி உள்ளனர்.

முதலில் சித்ராவின் மரணத்தை பற்றி அவரது குடும்பத்தினரும், வருங்கால கணவரும் எந்த ஒரு தகவலையும் வெளியில் கொண்டு வராமல் இருந்தனர்.

ஆனால் போலீசார் சித்ராவின் மொபைல் போனில் உள்ள போட்டோ மற்றும் மெசேஜ்களை ஆய்வு செய்து பார்த்தபோது, இவரது போனில் பல மெசேஜ்களும், போட்டோக்களும் டெலிட் செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர் போட்டோ மட்டும் மெசேஜ் ஏன் டெலிட் செய்ய வேண்டுமென்ற விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. 

chitra

chitra

அதுமட்டுமில்லாமல் சம்பவத்தன்று சித்ராவை காரில் அழைத்து வரும்போது மற்றொரு நடிகருடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியுள்ளார் என்ற விஷயம் தற்போது தான் விசாரணையில் வெளி வந்துள்ளது.

மேலும் அந்த விசாரணையில் தனக்கு கோபம் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால் சித்ராவை பார்த்து ஹேமந்த் செத்துத் தொல, இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காத என சொல்லி விட்டு சென்றுள்ளார். அதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

Continue Reading
To Top