fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கடைசியாக VJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல டிவி.. விஜய் டிவி மிஸ் பண்ணிட்டாங்களே.!

vj-chitra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசியாக VJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல டிவி.. விஜய் டிவி மிஸ் பண்ணிட்டாங்களே.!

தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாதவராய் திகழ்ந்தவர் வி.ஜே.சித்ரா. சீரியல் நடிகையாகவும் இருந்த சித்ரா மக்கள் மனதில் நிலைத்து நின்றதற்கு காரணம் விஜய் டி.வி-யின் புகழ் பெற்ற சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் இவர் நடித்திருந்த கேரக்டரான முல்லை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது எல்லோர் வீட்டுக்குள்ளும் முல்லையாகவே அடையாளம் பெற்றார் சித்ரா.

ஹேமந்த் ரவி என்பவரை திருமணம் செய்த சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாய் தொங்கியது சின்னத்திரை வட்டாரத்திலும் சித்ரா ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

சித்ரா மறைந்த அதே தருணத்தில் விஜய் டிவியும தன் பங்கிற்கு அவர் நடித்த காட்சிகளோடு ப்ளூப்பர்ஸ் காட்சிகளையும் இணைத்து ஔிபரப்பி சோகத்தை வெளிக்காட்டியது. முதல் முறையாக மக்கள் டிவியில் விஜேயாக களமிறங்கிய சித்ரா தொடர்ந்து ஜி தமிழ் சேனலில் ஔிபரப்பான டான்ஸ் புரோகிராம்களில் தன்னை ஒரு திறமையான டாண்ஸராக காட்டினார்.

calls-firstlook

calls-firstlook

விஜய் டிவியில் ஔிபரப்பான சரவணன் மீனாட்சி பாகம் இரண்டு மற்றும் மூன்றில் தோன்றி விஜய் டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அதன் காரணமாகவே அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வாய்ப்பும் தேடி வந்தது.

இந்நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சித்ரா கால்ஸ் என்கிற ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் படத்தின் ரிலீசுக்கு முன்பே சித்ரா இறந்து விட்டார் எனினும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சித்ராவுக்காகவே படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நந்தினி என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் சித்ரா ஒரு கால் செண்டரில் பணியாற்றும் பெண்ணாக நடித்திருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் ரிமத்தை வாங்கியள்ளது கலர்ஸ் டிவி. சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முல்லை இனி நந்தினியாக கலர்ஸ் டிவியில் வலம் வருவார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top