சித்ரா நினைத்து உருகும் சக நடிகர்கள்.. விஷயம் தெரிந்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

மக்கள் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே சித்ரா. அதன்பின்பு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் மூலமாக சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதற்குப்பிறகு சித்ரா பல தொடர்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம்தான் இவர் மிகவும் பிரபலமானார். இதில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் எளிதில் பதிந்தது.

இத்தொடரில் கதிர், முல்லை ஜோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு சித்ரா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றார். சுபாஷ் இயக்கத்தில் கால்ஸ் என்ற திரைப்படத்தில் சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்ரா விதவிதமான போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வந்தார்.

சித்ரா, ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு சில பிரச்சனையால் கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மரணம்  திரையுலகினரை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி பார்வையாளர்களையும் உலுக்கியது. அவ்வபோது சித்ராவின் புகைப்படங்களை எடிட் செய்து அவரது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு ஆறுதல் அடைந்து வருகிறார்கள். சித்ரா இறந்ததற்கு பின்புதான் வெள்ளித்திரையில் அவர் நடித்த கால்ஸ் படம் வெளியானது.

சித்ரா இருந்து ஓராண்டாகியும் அவரது பிரிவை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள், அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் சித்ராவுக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா, சித்ரா உடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, உன்னை இழந்து ஒரு வருடம் ஆகிறது, ஆனால் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீயே இருக்கிறாய்,உனக்கான வாழ்வை வாழ நீ மீண்டும் பிறக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement Amazon Prime Banner