Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொடுத்த காச விட ஓவரா டிராமா போடுவாங்க.. பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்த பிரபலம்.. கடுப்பான விஜய் டிவி!
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி, அனுதினமும் சென்டிமென்ட், ரொமான்ஸ், அழுகை, சண்டை என விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த VJ பாவனா, பிக் பாஸ்4 நிகழ்ச்சியை கிண்டல் செய்திருப்பது அந்த சேனலை கடுப்பாகி உள்ளது.
அதாவது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, விஜய் டிவியின் ஃபேவரிட் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் VJ பாவனா. இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக பணியாற்றி வருகிறார்.
அதனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பாவனா, பிக்பாஸ்4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களை கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த ட்வீட்டில் பாவனா, 50 நாட்களுக்கும் மேலாக ஐபிஎல்- காக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதாகவும், இதனால் அவர் எமோஷனலாவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ‘இந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் மூன்று வாரங்களில் இப்படி எல்லாம் அம்மா, அக்கா என்று அனைவரையும் கூப்பிடுவது எவ்வளவு அபத்தமானது?’ என்று கூறி பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்களை கலாய்த்திருக்கிறார் பாவனா.
மேலும் இந்த ட்வீட்டை பார்த்த பலர், ‘உங்களோட நெருங்கிய தோழி சம்யுக்தாவும் வீட்டுக்குள்ள தான் இருக்காங்க.. அவங்களுக்கும் இதே கருத்து தானா?’ என்று பாவனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

bhavana-twit
