பாத்ரூம் ட்ரோலை விட நல்ல செய்யறாங்க.. மனவேதனையில் அர்ச்சனா

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான அர்ச்சனா அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த அர்ச்சனாவுக்கு எதிர்மறையான கருத்துக்களை வெளியானது.

இதனால் இவருக்கு பல ஹேட்டர்ஸ் உருவானார்கள். பின்பு அர்ச்சனாவும், அவருடைய மகளும் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். அந்த யூடியூப் சேனலில் இவர்களுடைய பாத்ரூம் டூர் வீடியோ வெளியானது. இந்த வீடியோவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அந்த வீடியோவின் கீழ் பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் இடம்பெற்றிருந்தது. அத்துடன் பல யூடியூப் சேனல்களும் இந்த வீடியோவை ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியை அர்ச்சனாவும், அவரது மகள் சாராவும் இணைந்து தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

தற்போது விஜய் டிவியில் தாயில்லாமல் நானில்லை என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும், சாராவும் தொகுத்து வழங்குவதற்கான புரோமோ வெளியாகியிருந்தது. இதைப்பார்த்த ஹேட்டர்ஸ் நெகட்டிவ் கமெண்ட்டுகளை சரமாரியாக வீசி வருகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக அர்ச்சனாவும், சாராவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் நாங்கள் அன்பை வரவேற்பவர்கள். எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அதை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள். அவளிடமிருந்து நாங்கள் அன்பை எதிர் பார்க்கவில்லை என பதிவிட்டிருந்தார். எங்களைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்துபவர்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.

இதை பார்த்த பல பிரபலங்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி, உங்கள் இருவருக்கும் அதிக பலம் கிடைக்கட்டும் அர்ச்சனா, சாரா இருவரும் எதையும் விட்டுக்கொடுக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

எப்பொழுதும் கலக்கிக் கொண்டே இருங்கள் தட்டிவிடு, செதரவிடு என தொகுப்பாளினி ஜாக்லின் பதிவிட்டிருந்தார். அதேபோல் தொகுப்பாளினி நிஷா மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் அர்ச்சனா, சாரா இருவருக்கும் ஆதரவு தெரிவித்தவர்கள். ஒரு தொகுப்பாளினி ஏற்பட்ட பிரச்சனைக்கு அதே துறையை சேர்ந்த பல தொகுப்பாளினிகள் குரல் கொடுப்பது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்