VJ அஞ்சனாவிடம் சில்மிஷம்.. தொல்லை கொடுத்த நபரை கதறவிட்ட கணவர்

சன் மியூசிக் சேனல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. இவரது துறுதுறுப்பான பேச்சாலும் ,ஒரு சிலர் செல்ல சேட்டைகளாலும்ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்களின் பேட்டிகள் என அனைத்து துறைகளிலும் தனது திறமையைக் காட்டினார்.

சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்காமல் இருக்கும் விஜே அஞ்சனா தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பிற்கு உள்ளாக்கி வருகிறார்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். ஒருபக்கம் ரசிகர்கள் தைரியமாக கூறியது பாராட்டுக்குரிய விஷயம் என கூறினாலும், மற்றொரு பக்கம் இத்தனை நாள் மூடி வைத்து விட்டு இப்போது எதற்கு இதையெல்லாம் செல்கிறீர்கள். அப்போது இதற்கும் உங்களுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

vj anjana
vj anjana

இப்படி இருக்கும்போது விஜே அஞ்சனா தினமும் ஒரு போன் நம்பரில் இருந்து அவருக்கு ஆபாசமான மெசேஜ்கள் வருவதும் பேசுவதுமாக தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது கணவர் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பிய போன் நம்பரையும் தமிழ்நாடு காவல் துறைக்கு அனுப்பி புகார் கொடுத்துள்ளார். சமீபகாலமாக பிரபலங்களுக்கு பலரும் இந்த மாதிரி தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு உடனடியாக காவல்துறையினர் யார் அந்த நபர் என்பதை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டுமென பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News