இன்னும் தெளிவா சொல்லி இருக்கலாம்; எனினும் புத்திசாலித்தனமான படைப்பு ! NGK பார்த்துவிட்டு – இது தானுங்க கதை என ஸ்டேட்டஸ் தட்டியுள்ள VJ அஞ்சனா.

NGK படத்திற்கு மாஸ் ஒபெநிங் கிடைத்துள்ளது. எனினும் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இரண்டரை மணிநேரம் படம், சிறிதும் போர் அடிக்காமல் தான் செல்கிறது. ஆனால் விமர்சகர்கள், சினிமா அனலிஸ்ட்கள் என முதல் நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. எனினும் நேற்று முதல் பலர், NGK பற்றி தங்கள் பார்வையில் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜே அஞ்சனா ரங்கன் NGK பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“இப்பொழுது தான் எனக்கு விளக்கமாக சொன்னார்கள் படக்கதையை முதல் அமைச்சர் NGK சொல்வது போல எடுக்கப்பட்டுள்ளது. (ஒருதலை பட்சமாக, முழுவதும் பொய்கள் நிறைந்த, தன்னை நல்லவனாக சித்தரித்து சொல்கிறான்) ஆனால் படம் நெடுகிலும் அவன் எப்படி பட்டவன் என நமக்கு உண்மை புரிய பல இடங்களில் இயக்குனர் க்ளூ வைத்துள்ளார். இருந்தும் இன்னமும் அதிகம் தெளிவாக படத்தில் காமித்திருக்கலாம் என்பதே என் கருத்து. ஆனால் இது புத்திசாலித்தனமான படைப்பு என உணர்கிறேன்.”

Leave a Comment